மணல் - 1969 இல் எழுதப்பட்ட குறுநாவல்.
சரோஜினி என்ற பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பெண், தன் வீட்டிற்கு கொல்லைப்புறமாய் உள்ளே நுழைகிறாள். அம்மாவை அழைத்து தலையில் தண்ணீர் ஊற்ற சொல்கிறாள். அம்மா வரவில்லை வேலைக்காரி தான் வருகிறாள்.
துணி காயப்போடும் கொடியில் சிறு குழந்தைகள் துணி காய்வதை பார்த்து தன் அக்கா இன்று வந்துள்ளதை கண்டு கொள்கிறாள். தன் பள்ளியில் இன்று பையலாஜி பிராக்டிகல் வகுப்பில் கரப்பான் பூச்சி அறுத்து பார்த்ததால் குளித்து விட்டு தான் உள்ளே செல்ல வேண்டும்வீட்டினுள். ஆச்சாரமான பிராமண குடும்பம் அது.
அந்த குடும்பத்தில் வீட்டை பார்த்து கொள்ளுதல் அனைத்தும் அவள் அம்மா தான். வேலா வேலைக்கு உணவு மற்றும் இதர வீட்டு வேலைகள் அனைத்தும் அவள் தான். மூத்த அக்கா வனஜாவுக்கு மூன்று குழந்தைகள். கடைசி குழந்தை 1 வயது ஆண் பிள்ளை. மற்ற இரண்டும் முறையே ஆண் மற்றும் பெண்.
சரோவுக்கு அவள் ஏன் திடீரென வந்தாள் என்பது சந்தேகம். அதுவும் புருஷன் இல்லாமல். தன் அண்ணன் மணி, அக்கா வனஜாவிடம் கேட்ட போது தான் தெரிந்தது அவள் 2 மாதம் இங்கேயே இருக்க போகிறாள் என்று. கணவனுடன் சண்டை. அதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை.
சரோஜினி, வனஜா தவிர பவானி என்ற இன்னொரு பெண்ணும் அப்பு மற்றும் மணி என்று இரு அண்ணன்கள். பவானிக்கு சில மாதம் முன்பு தான் திருமணம் முடிந்தது. அண்ணன் மணிக்கு ஜாதகம் வருகிறது திருமணத்துக்கு. அப்பாவும் மணியும் சரியாக பேசிக்கொள்வதில்லை. மணி மற்றும் அப்பு இருவரும் வேலைக்கு போகிறார்கள். அப்புவிடம் கூட அப்பா சரியாக பேசுவதில்லை. கூட்டு சம்பாத்தியம். ஆனால் தினம் இரவு உணவுக்கு பிறகு 2அண்ணன்களும் வெளியே சென்று விட்டு இரவு 10 மணிக்குத்தான் திரும்புவார்கள்.
2 மாதமாக வனஜா அங்கேயா இருக்க அவளுக்கு வீட்டில் மரியாதை குறைகிறது. அவள் குழந்தைகள் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு பாரமாக இருக்கிறது. மணி அவளின் மூத்த குழந்தையை ஏதோ திட்ட வனஜா அதற்கு " பள்ளிக்கூடம் சேர்த்து படிக்க வைக்க துப்பில்லை" என்று தன் அண்ணனிடம் கிடக்கிறாள். அவள் நிரந்தரமாக இங்கேயே இருக்க போகிறாள் என்பது போல தெரிகிறது.
அம்மாவும் வனஜாவும் ஒரு நாள் டேன்ஸ் பார்க்க வெளியே செல்ல அம்மாவுக்கு தலை சுற்றல் வந்து அங்கு இருந்து வீடு திரும்புகிறார்கள். அன்று டாகடர் வீட்டிற்கு வரும் முன்பே அம்மா இறந்து போகிறாள்.
பவானி தன் வளைகாப்புக்கு அம்மா தங்க வளையல் போடுகிறேன் என்று சொன்னாள் என்று சொல்கிறாள். வனஜா அம்மாவின் நகையை சரியாக பிரிக்க வேண்டுமென்று அவர்களின் பெரியம்மாவிடம் சொல்கிறாள். பெரியம்மாவை இவர்கள் கூடவே இருக்க சொல்லி கேட்கிறார்காள். அவளுக்கு குடும்பம் இல்லை. ஆனால் அவள் மறுத்து விடுகிறாள்.
அம்மா இறந்து போடப்படட பந்தலை பிரிக்கிறார்கள். வனஜா தன் கணவன் வீட்டுக்கு கிளம்ப ஆயுத்த மாகிறாள். அவள் கணவன் அங்கு வந்து உள்ளான். சரோவை நன்றாக படிக்க வையுங்கள் என்று அவள் அப்பாவிடம் சொல்கிறான். அவள் பரிட்சைக்கு இன்னும் 1 மாதமே உள்ளதால் பெரியம்மா வனஜாவை ஒத்தாசையாக இருக்குமாறு கேட்க்கிறாள்.
பவானி, தலை பிரசவம் பார்க்க தாய் வீடு வர அங்கே அவளை கூடவே இருந்து பிரசவம் பார்க்க ஆள் (அம்மா) இல்லாமல் அவதிப்படுகிறாள். அங்கு நர்ஸுகள் அவர்களை மதிப்பதில்லை அது ஒரு அரசு மருத்துவமனை. ஆஸ்ப்பித்திரியில் மிகவும் கஷ்டப்படுகிறாள். சரோ அவளை பார்க்க செல்ல, பவானி அவளிடம் அழுகிறாள். அந்த குடும்பத்து ஆண்கள் சரிவர பவானியை கவனிப்பதில்லை.
சரோஜினி 1st கிளாசில் தேர்ச்சி பெறுகிறாள். மருத்துவம் படிக்க ஆசை படுகிறாள். அவள் அப்பா தன் பூணூலை எடுத்துக் காட்டி எப்படி நமக்கு சுலபமாக டாகடர் ஸீட் கிடைக்கும் என்று தன் அம்மாவுக்கு காரியம் செய்ய வந்த சாஸ்திரிகளிடம் சொல்கிறார்.
சாஸ்திரிகள் மணிக்கு வந்த ஜாதகம் பற்றி கேட்கிறார்."நீங்க போய் பெண் பார்த்து வந்து விட்டீர்களே? பதில் சொல்ல என்ன தாமதம்? கெட்ட காரியம் நடந்த இடத்தில் ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டும்" என்றும் கூருகிறார். அம்மா உயிரோடு இருந்த போது அவள் இந்த பெண் வேண்டாம் என்று மணியிடம் சொல்லி இருந்தாள். மணிக்கு அம்மா சொன்னதில் உடன்பாடில்லை.
அப்பு சரியாக மாத சம்பள பணத்தை வீட்டில் தருவதில்லை. பவானியின் குழந்தைக்கு பால் பவுடர் வாங்க காசு இல்லாததால் இந்த பேச்சு வந்து பின் அப்பா அதை பற்றி கேட்காமல் விட, வனஜா அதை பற்றி கேட்கிறாள். அப்பு அது பற்றி கேட்க அவளுக்கு உரிமையில்லை என்கிறான்.
அப்பு ஒருநாள் தான் வீட்டை விட்டு வெளியேருகிறேன் என்று சொல்ல அவன் அப்பா அவன் வேறொரு ஜாதி பெண்ணனை திருமணம் செய்து கொண்டு தனியே வாழ்கிறான் என்று தெரிந்து கொள்கிறார். யாரும் அவனை தடுக்கவில்லை.
ஒரு நாள் மளிகை பொருட்கள் வாங்க சென்ற போது ஒரு போட்டோ கடைக் காரன் அவளை ஒரு மாதிரியாக பார்ப்பதும் , சமிக்கை செய்வதுமாக இருந்தான். அடிக்கடி அவளை ஒரு மாதிரியாக பார்ப்பதாகவே இருந்தான். சரோஜினிக்கு அது சுத்தமாகவே பிடிக்கவில்லை.
அவனை பற்றி "அவன் ஒரு பொறுக்கி" என்று அவளின் பெண் தோழி ஒருத்தி சொல்வதை கேட்கிறாள். அதோடு தான் பி ஸ் சி படிப்பதாகவும் "நீதான் ஏதோ மெடிக்கல் படிக்க போறனு சொல்லிட்டு ஒன்னும் பண்ணாம சுத்துற" என்று சொல்லிவிட்டு சில கிசு கிசுக்களையும் பேசிவிட்டு அவள் தோழி சென்றாள் .
அன்று வீடு வரும் வழியில் சைக்கிளில் எதிரில் வரும் அந்த போட்டோ கடைக்காரன் அவளை கடக்கும் பொழுது "சிவன் பார்க்காண்ட 4 மணிக்கு தெனமும் உனக்காக காத்திருப்பேன்" என்று சொல்லிவிட்டு போனான். அவளுக்கு அது மேலும் எரிசலூட்டியது.
பவானியும், வனஜாவும் அவரவர் வேலையை பார்த்து சென்று விட. வீட்டில் சரோஜினி அப்பா மற்றும் மணி ஆகியோர் வாழ்கின்றனர். சரோஜினி பற்றி யாரும் யோசிப்பார் இல்லை. அவள் அவளின் அம்மாவின் இடத்தை பிடித்து இருந்தாள். சாயங்காலம் மணி வந்த வுடன் காப்பி போட்டு கொடுப்பது மற்றும் ஆண்கள் இருவருக்கும் சமைத்து கொடுப்பது, வீட்டு வேலைகளை பார்த்துக்கொள்வது இது தான் அவள் அன்றாட வேலை. வனஜாவிடம் இருந்து வழக்கமாய் வரும் கடிதம் வந்தது. இந்த முறை கடைசி வரி புதிதாய் சேர்ந்து இருந்தது "அப்புவுக்கு குழந்தை பிறந்திருக்கிறதாம் போய் பார்த்தீர்களா?".
மணி மாலை 3.45. தலையை வாரிக்கொண்டு கண்ணாடியில் அவள் முகத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டு பொட்டை சரி செய்து கொண்டாள் . கடிகாரத்தை ஒருமுறை பார்த்து விட்டு வெளியே நடக்க ஆரமித்தாள். மணி "எங்கேஇத்தனை மணிக்கு? காபி போடு" என்று செருப்பை கண்டபடி கழட்டி விட்டு உள்ளேவந்த வண்ணம் கேட்டான். அவள் பதிலேதும் சொல்லவில்லை. தெருவில் இறங்கி நடந்து சென்றாள். வலது புறம் திரும்பியதும் சிவன் பார்க் கண்ணிற்கு தெரிந்தது.
